சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு: பாமக பிரமுகர் சர்ச்சை அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பிரமுகர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு கடந்த சில நாள்களாக வன்னியர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி அவர்கள் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதும் இந்த அறிக்கைக்கு சூர்யா பதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் ’ஜெய்பீம்’ தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ’நடிகர் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கதாபாத்திரங்களுக்கு உண்மை பெயரை சூட்டி விட்டு வேண்டும் என்றே தங்கள் நிறுவனத்தின் பிரமுகர் காடுவெட்டி குரு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வில்லனுக்கு அவரது பெயரை வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தங்கள் சமுதாய மக்களை இழிவு படுத்திய சூர்யா, மயிலாடுதுறை மாவட்டம் வந்தால் அவரை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments