மன்னிப்பு கேட்டால் ஒரு லட்சம் மணியார்டர்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,November 19 2021]

’ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் அனுப்பப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாமகவினர் கூறி வருகின்றனர் என்பது பார்த்து வருகிறோம். ஏற்கனவே சித்தமல்லி பழனிச்சாமி என்பவர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாமக மாநில பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் இன்று பேட்டி அளித்தபோது ’சூர்யாவின் வீட்டிற்கு 5 போலீஸ் பாதுகாப்பு போட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தமிழகத்தில் சூர்யா படம் வெளியாகும் போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் சூர்யா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு அவர் மன்னிப்பு கேட்டால் என்னுடைய சார்பாக ஒரு லட்ச ரூபாய் சூர்யாவுக்கு மணியாடர் அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

வர்றேன், திரும்ப வர்றேன்: சிம்புவின் 'மாநாடு' டிரைலர்

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

செல்லக்கிளியுடன் தல தோனி… இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, பண்ணை விவசாயம் மற்றும் இயற்கை மீது அதிக

நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒரு வார்த்தை, என் வாழ்வை மாற்றியது… பிரபல நடிகை புகழாரம்!

பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் பிரபல நடிகை ராணி

உள்ளே வந்தார் அபிஷேக்: போட்டியாளர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக வீட்டை விட்டு வெளியே போன அபிஷேக் மீண்டும் உள்ளே வரப் போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்', இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது