இந்த ஐந்து வார்த்தைகளை ரஜினியால் சொல்ல முடியுமா? அன்புமணி

  • IndiaGlitz, [Sunday,January 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 31ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில், இதுவரை அவரை விமர்சனம் செய்யாதவர்களும் தற்போது விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இந்த வகையில் நேற்று லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வர தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது:

ஒருசில ஊடகங்கள் ரஜினிகாந்த் வந்தால் உங்களுக்கு பயமா? என்று எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். எங்களுக்கு ரஜினியை பார்த்து பயமில்லை, ரஜினிக்குத்தான் எங்களை பார்த்து பயம். நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞரை எதிர்த்து அரசியல் செய்துள்ளோம். போலீஸ்,ராணுத்தையும் எதிர்த்துள்ளோம். நாங்கள் 28 வருடங்களாக கட்சி நடத்தி வருகிறோம். நாங்கள் வந்த பாதை சாதாரண பாதை கிடையாது,.

ரஜினிகாந்த் ஐந்தே ஐந்து வார்த்தையை கூறுவாரா? மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும்,. இந்த ஐந்து வார்த்தையை ரஜினியால் சொல்ல முடியுமா? அப்படி சொல்லிவிட்டால் அவருடைய படங்கள் கர்நாடகாவில் ஓடாது. அப்ப இதில் பொதுநலம் என்ன உள்ளது, சுயநலம் தானே.

More News

அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பதிலடி

கடந்த சில மாதங்களாக கட்சி பேதமின்றி ஒருசில அரசியல்வாதிகள் திரையுலகினர்களிடம் மோதுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுடைய விமர்சனங்கள் ரஜினி, கமல், விஜய் உள்பட பலரின் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றது.

ஆன்மிக அரசியல் என்றால், அது பாஜக அரசியல் தான்: தினகரன்

அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. ஆன்மீகம் என்றாலே மதம் தான். ஆன்மீகம் என்பது மதம் இல்லாமல் இல்லை

8 மணி நேரத்திற்குள் புதிய ரயில்பாலம்: இந்தியன் ரயில்வே சாதனை

வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இந்தியன் ரயில்வே வெறும் 8 மணி நேரத்திற்குள் ரயில்பாலம் ஒன்றை கட்டி புதிய சாதனை செய்துள்ளது

குழந்தைகளுக்கான ஆக்சன் அட்வென்சர் படத்தில் மாதவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் மாதவன் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆனார்.

லாலுபிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அவருடைய தண்டனை குறித்த விபரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.