இந்த ஐந்து வார்த்தைகளை ரஜினியால் சொல்ல முடியுமா? அன்புமணி
- IndiaGlitz, [Sunday,January 07 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 31ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில், இதுவரை அவரை விமர்சனம் செய்யாதவர்களும் தற்போது விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இந்த வகையில் நேற்று லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வர தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது:
ஒருசில ஊடகங்கள் ரஜினிகாந்த் வந்தால் உங்களுக்கு பயமா? என்று எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். எங்களுக்கு ரஜினியை பார்த்து பயமில்லை, ரஜினிக்குத்தான் எங்களை பார்த்து பயம். நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞரை எதிர்த்து அரசியல் செய்துள்ளோம். போலீஸ்,ராணுத்தையும் எதிர்த்துள்ளோம். நாங்கள் 28 வருடங்களாக கட்சி நடத்தி வருகிறோம். நாங்கள் வந்த பாதை சாதாரண பாதை கிடையாது,.
ரஜினிகாந்த் ஐந்தே ஐந்து வார்த்தையை கூறுவாரா? மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும்,. இந்த ஐந்து வார்த்தையை ரஜினியால் சொல்ல முடியுமா? அப்படி சொல்லிவிட்டால் அவருடைய படங்கள் கர்நாடகாவில் ஓடாது. அப்ப இதில் பொதுநலம் என்ன உள்ளது, சுயநலம் தானே.