20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விபட்டதும் பார்த்ததும் இல்லை. கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கொரோனா போன்ற தாக்குதல் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது கொரோனா எனும் ஒரு வைரஸ்! நாடு இதுவரை எதிர்கொள்ளாத மாபெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான் முடியும்: கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது

கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்! இந்தியா ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும்! எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்! காசநோய், போலியாவை எவ்வாறு இந்தியா வெற்றியாக கையாண்டு உலகுக்கு வழிகாட்டியதோ அவ்வாறே கொரானைவையும் வெல்வோம்

கொரோனா தொற்று ஏற்பட்டு 4 மாதங்கள் கடந்துவிட்டது! கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது! நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது! யாரும் எதிர்பாராத விபரீதம் இது

தினமும் இந்தியாவில் இரண்டு லட்சம் PPE மற்றும் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன. தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன

21வது நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்பதை நிரூபிக்கவேண்டிய நேரமிது. உலகநாடுகளைவிட இந்தியா மிக மிக நன்றாக கொரோனா தடுப்பில் செயல்படுகின்றது. தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும்

கொரோனா வைரஸ் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு போர். கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சூறையாடி விட்டது. நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம். தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம்

இந்தியா அனுப்பி வைத்த மருந்துகள்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்தியாவில் வளங்கள் இருக்கிறது, அறிவு இருக்கிறது, சிறந்த பொருட்களை உருவாக்க முடியும். நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒய்2கே பிரச்சனை வந்தது. இந்திய பொறியாளர்களே தீர்வு கண்டனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அன்பிற்குரியவர்கள் சிலரை பறிகொடுத்துள்ளோம். கொரோனாவிலிருந்து மீள தன்னம்பிக்கை தான் ஒரே வழி

இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் இந்த பொருளாதார மிட்டமைப்பு திட்டம் குறித்து தெளிவாக விவரிப்பார். நடுத்தர குடும்பங்கள் இந்த திட்டத்தின்மூலம் பயனடைவார்கள். நிச்சயம் இந்தியா பொருளாதார சிக்கலிலிருந்து மீளும்.

4ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்; மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்