ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் எடுத்த முடிவு என்ன? அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது என, பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாகவும், வளர்ந்த நாடுகளை விட இந்தியா எடுத்த நடவடிக்கை சிறப்பானது என்றும் ஊரடங்கை தொடராவிட்டால் இதுவரை எடுத்த நடவடிக்கை வீணாகி விடும் என்றும், நிலைமை கட்டுக்குள் வைக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும், இந்த உரையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

 

More News

கொரோனா பரிசோதனையில் தொடரும் குழப்பங்கள்!!! இந்தியாவின் நிலைமை என்ன!!!

கொரோனா நோய்த்தொற்று மற்ற பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் போன்று இருப்பதில்லை. இதற்காகச் செய்யப்படும் பரிசோதனை முதற்கொண்டு இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வரை அனைத்தும் வித்தியாசப்படுகின்றன

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற நபர் கைது

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்கச் சென்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட 51 பேர்களுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒரு பக்கம் பாதிப்பு அடைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனாவில் இருந்து மீண்டு குணமாகி

8 ஆயிரம் கோடி வீடியோவுக்கு மன்னிப்பு கேட்ட மதுவந்தியின் வேறு சில கேள்விகள்!

சமீபத்தில் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வெளியிட்ட வீடியோ ஒன்றில்  8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி

இதை நான் சொல்லவே இல்லை: ரத்தன் டாடா விளக்கம்

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1500 கோடி கொடுத்து நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருடைய அறிவிப்புக்கு பின் வெளிநாட்டு