போயிடுவேன்னு நினச்சீங்களா.. அது, மகளிர் தினத்துக்கான சிறப்பு பதிவு..! நரேந்திர மோடி.
Send us your feedback to audioarticles@vaarta.com
மார்ச் 8-ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தை மகளிர் தினத்துக்காக பெண்கள் நிர்வகித்துக்கொள்ளலாம் என்று மோடி, சமூக வலைதளத்தில் இருந்து விலகப்போவதாக சொன்னதற்கான சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.
பிரதமர் மோடி தான் அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் விலகி இருப்பது பற்றி தான் யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.
இது எந்த விதமான அறிவிப்பு என நெட்டிசன்கள் பல்வேறு விதமான யோசனை கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒருவேளை இந்திய மக்கள் முழுவதுமாக சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை வரலாம் என ஒரு தரப்பினரும்.. இந்த சமூக ஊடகத்தால் நாம் பல கோடி ரூபாய் வருவாய்களை அந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறோம். நமது பிரதமர் தனது தொலைநோக்கு சிந்தனையால் யோசித்து அதை குறைக்க இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சிலரும் கூறி வந்தனர்.மேலும் அவரது ஆதரவாளர்கள் #Nosir போகாதீர்கள் என ட்ரெண்ட் செய்து வந்திருந்தார்கள்.
ஹிஸ்டரி ஆஃப் இந்தியா எனும் ட்விட்டர் பயனாளர் இன்டர்நெட் பயன்படுத்த போவதில்லை என்றால் மோடி காஷ்மீருக்குள் நுழைய போகிறாரா..?! என்று கிண்டலாக டிவீட் செய்திருந்தார். கடந்த 7 மாதமாக காஷ்மீர் மக்கள் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இது மிகப் பெரிய கருத்துரிமை பறிப்பு என பல ஜனநாயக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னொரு நபர், இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு போல் மோடியின் இந்த டிவீட்டுக்கு நன்றி சொல்லி இனிமேலாவது என் மீது பழி போடாமல் உங்களுடைய வேலையில் சிறப்பாக செயல்படுங்கள் என டிவீட் போட்டிருந்தார்.
இந்நிலையில் மோடி தான் சமூக வலைத்தளத்திலிருந்து விலகப்போவதில்லை என்றும் மகளிர் தினத்திற்கு என சிறப்பு நிகழ்ச்சியாக பெண்கள் தனது டிவிட்டர் அக்கவுண்ட்டை ஒருநாள் உபயோகித்துக்கொள்ளலாம் என இன்று தெரிவித்துள்ளார்.
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments