திடீரென காலியான பிரதமர் மோடியின் 'வெய்போ' அக்கவுண்ட்: என்ன காரணம்?
- IndiaGlitz, [Wednesday,July 01 2020]
சீனாவின் ‘வெய்போ’ என்ற சமூக வலைதளம் டுவிட்டருக்கு இணையானது என்பதால் அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தனது அக்கவுண்ட்டை தொடங்கினார். பிரதமர் மோடி ‘வெய்போ’ அக்கவுண்ட் தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள் அவருக்குக் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அக்கவுண்ட்டில் அவர் சீனப் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது உள்பட முக்கிய போஸ்டுகளை பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீன இந்திய ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக இந்திய சீன உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் ‘வெய்போ’ அக்கவுண்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து போஸ்ட்களும் டெலிட் செய்யப்பட்டதாகவும் தற்போது அவரது அக்கவுண்டில் இரண்டு போஸ்ட்களை தவிர வேறு எதுவும் இல்லை என்றும், ‘வெய்போ’ அக்கவுண்டில் பிரதமர் மோடியின் புரொபைல் பிக்சரும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.
பிரதமர் மோடி தனது வெய்போ அக்கவுண்டில் இதுவரை 115 போஸ்டர்களை பதிவு செய்திருந்தார். ஆனால் அதில் 113 போஸ்ட்கள்டெலிட் செய்யப்பட்டதாகவும் சீன அதிபர் ஜின்பிங் உடன் எடுத்துக் கொண்ட இரண்டு போஸ்ட்கள் மட்டுமே தற்போது அதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபரின் புகைப்படம் உள்ள போஸ்ட்களை எளிதில் டெலிட் செய்ய முடியாது என்பதால் அந்த இரண்டு போஸ்ட்கள் மட்டும் உள்ளன என்பது கூறப்படுகிறது.
மேலும் ‘வெய்போ’ அக்கவுண்டில் இருந்து பிரதமர் மோடி இன்னும் ஒரு சில நாட்களுக்குள் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.