அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்: பிரதமர் மோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நகைச்சுவை வசனங்கள் மூலம் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் விவேக் என்று அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியதாவது: பிரபல நடிகர் விவேக்கின் எதிர்பாராத மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை நடிப்பும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The untimely demise of noted actor Vivek has left many saddened. His comic timing and intelligent dialogues entertained people. Both in his films and his life, his concern for the environment and society shone through. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments