கொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. இன்று காலை நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி அவர்கள் ’ஊரடங்கு உத்தரவை அனைவரும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் 130 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாததால் ஒரு சிலர் இன்னும் வெளியே நடமாடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து முக்கிய விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல் கட்டமாக விளையாட்டு வீரர்கள் 40 பேர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனையில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, பிவி சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே விரைவில் கொரோனா குறித்து விளையாட்டு பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளி வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com