லடாக்கில் திடீர் விசிட்: கெத்து காட்டிய பிரதமர் மோடி
- IndiaGlitz, [Friday,July 03 2020]
இந்தியா சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் பல உயிர்கள் பலியானதாக கூறப்பட்டாலும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை.
இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இன்று லடாக்கில் நேரில் சென்று இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென நேற்று அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை திடீரென லடாக் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ஆய்வு செய்து வருகிறார். மேலும் ராணுவ தலைமை தளபதி அவர்களும் பிரதமருடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக லடாக் பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டு வரும் நிலையில் திடீரென பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு சென்று இராணுவ வீரர்களை நேரில் என்று தைரியமூட்டி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லடாக் பகுதியில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி உட்கார்ந்து இருக்கும் கெத்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.