close
Choose your channels

ரஜினியின் உடல்நிலை: லதா ரஜினியிடம் போனில் பேசிய பிரதமர் மோடி..!

Wednesday, October 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் மோடி விசாரித்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த நாளங்களில் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அதற்கான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டது.

இந்தநிலையில், ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பலர், அவரது விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, லதா ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதை அறிந்ததாகவும் அண்ணாமலை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment