ரஜினியின் உடல்நிலை: லதா ரஜினியிடம் போனில் பேசிய பிரதமர் மோடி..!

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் மோடி விசாரித்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த நாளங்களில் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அதற்கான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டது.

இந்தநிலையில், ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பலர், அவரது விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, லதா ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதை அறிந்ததாகவும் அண்ணாமலை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

More News

'கோட்' படத்தில் பட்டையை கிளப்பிய டான்ஸ் மாஸ்டர்.. 'தளபதி 69ல் இணைகிறாரா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சேகர் மாஸ்டர், தளபதி 69 படத்திலும் ஒரு பாடலுக்காக நடன இயக்குனராக பணியாற்ற

'பரிதாபங்கள்' லட்டு வீடியோ மீண்டும் பதிவேற்ற வேண்டும்: டிஜிட்டல் படைப்பாளிகள்

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை: தளபதி விஜய் பதிவு செய்த ட்வீட்..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று தளபதி விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை

'தளபதி 69' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அறிவிப்பு.. முதல் அறிவிப்பே மாஸ்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69' திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இன்று முதல் வெளியாக இருப்பதாக