மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி

கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், 21 நாட்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் நாடு 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வானொலியில் பேசிய பிரதமர் மோடி, ’வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது என்றும், இந்த சூழலில் வேறு வழியில்லை என்றும் கூறினார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது என்றும், ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள் என்றும் சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கத்தையும் பிரதமர் மோடி செலுத்தினார்.

More News

20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் இருக்கும் நிலையிலும் தாய்லாந்து நாட்டின் அரசர்,

பயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை செய்ய அதிகாரிகள்

8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் எப்போது அழியும் என 8 மாதத்துக்கு முன்பே கொரோனா வைரசை கணித்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளதை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரை என்பவர் சென்னையில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்

அவசர பயணம் செல்லவேண்டுமா? உதவி செய்கிறது தமிழக அரசு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் யாரும் வெளியே நடமாட அனுமதி இல்லை. மிகவும் அவசிய தேவை இருந்தால் மட்டும் மக்கள் வெளியேற வேண்டும்