மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், 21 நாட்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் நாடு 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் வானொலியில் பேசிய பிரதமர் மோடி, ’வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது என்றும், இந்த சூழலில் வேறு வழியில்லை என்றும் கூறினார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது என்றும், ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள் என்றும் சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கத்தையும் பிரதமர் மோடி செலுத்தினார்.