என்னை போலவே பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்த உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முதலில் அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கருப்புப்பணம் ஒழியும் என்றும் அவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

ஆனால் பொருளாதார மேதைகளும், எதிர்க்கட்சிகளும், முன்னாள் நிதியமைச்சரும் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப்பணம் ஒழியவில்லை என்றும் இந்த நடவடிக்கையே உள்நோக்கம் கொண்டது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் உலகநாயகன் கமல்ஹாசன், 'பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அவசரப்பட்டு பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாகவும், தன்னை போலவே பிரதமரும் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரினால் அவருக்கு இன்னொரு சலாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி கூட தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதால் பிரதமரும் அதை செய்வார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கமல் மேலும் தெரிவித்துள்ளார்.

More News

நிலவேம்பு கசாயம் வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோதிகா!

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு IndiaGlitz தனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் நேரில் சந்தித்த விஜய்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் முதல் காட்சி திரையிடப்படவுள்ள நிலையில் சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் மீண்டும் சந்தித்தார்.

'வெற்றி' திரையரங்கில் ரசிகர்களுடன் 'மெர்சல்' பார்க்கும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பக்கா மாஸ் என்றும் குறிப்பாக மாறன் கேரக்டர் அட்டகாசமாக இருப்பதாக

சென்னை காசியில் 'மெர்சல்' கொண்டாட்டம் ஆரம்பம்

சென்னையில் ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விருப்பத்திற்குரிய திரையரங்கான காசி திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படம் எதிர்பாராத காரணமாக திரையிடப்படும் வாய்ப்பு இல்லை