விஷாலுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி.. கிண்டல் செய்த தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசி சென்ற நடிகர் விஷால், பக்தர்களுக்காக அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார். விஷாலின் இந்த டுவீட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ள நிலையில் விஷாலின் டுவிட்டை தமிழ் நடிகர் ஒருவர் கிண்டல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலக ஆக்சன் நடிகர்களில் ஒருவரான விஷால் சமீபத்தில் காசி சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் காசியில் உள்ள கங்கையில் புனித நீராடினார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் அதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.
விஷாலின் இந்த ட்விட்டுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, உங்களுடைய அருமையான காசி அனுபவத்தை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் விஷாலின் இந்த ட்விட்டுக்கு தமிழ் நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ், ‘ஷாட் ஓகே.. நெக்ஸ்ட்; என்று கிண்டல் செய்யும் வகையில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi) November 2, 2022
Shot Ok…. Next ??? … #justasking https://t.co/uybmBFVSwZ
— Prakash Raj (@prakashraaj) November 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments