100வது வயதில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.. உலக தலைவர்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் தாயார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஹீராபென் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்த நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி காலாமானார்.
இன்று அதிகாலை தனது தாயார் 03.30 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தாய் இறந்த செய்தி கேட்டு தனது டுவிட்டரில் பிரதமர் மோடி உருக்கமாக பதிவு செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது துறவியின் பயணம் போன்று அவரது வாழ்க்கை இருந்தது. அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தாயார் மறைவு செய்தியைக் கேட்டவுடன் பிரதமர் மோடி அகமதாபாத் விரைந்துள்ளதாகவும் தாயார் இறுதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम... मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com