திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் தினந்தந்தி பவளவிழா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் திருமணம் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இன்று பகல் 12.30 மணிக்கு அவர் கருணாநிதியின் இல்லம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்றைய பிரதமரின் வருகையில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் இருக்கும் என்று நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செள்நதிரராஜன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com