'காலா' ரஜினி பாணியில் பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த இந்த படத்தில் ரஜினியின் கருப்பு உடை ஃபேமஸ் ஆனது. இந்த படம் வெளியான பின்னர் பலர் கருப்பு உடையில் தோன்றுகின்றனர்,

இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று அவரது சமூக வலைத்தளத்தில் பிட்னெஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளது. இதில் விசேஷம் என்னவெனில் அவர் இந்த உடற்பயிற்சியை காலா' பாணியில் கருப்பு உடை அணிந்து உடற்பயிற்சி செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, பிரதமர் மோடிக்கு பிட்னெஸ் சவால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு விரைவில் பதில் ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிடுவதாக கூறியிருந்த பிரதமர், இன்று இந்த வீடியோவை வெளீயிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 நிமிடம் 48 வினாடிகள் நீடிக்கும் இந்தப் வீடியோவில் புல் மீதும் கற்கள் மீதும் நடந்து தனது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக்கொள்வதாகத மோடி தெரிவித்துள்ளார்.