மோடி ஒரு பயங்கரவாதி: ராகுல்காந்தி முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடி பயங்கரவாதி போல் இருப்பதாகவும் அவர் எப்போது குண்டு போடுவார் என மக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான விஜய்சாந்தி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான விஜய்சாந்தி, 'வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும் தான் போர். பிரதமர் மோடி சர்வாதிகாரியை போல ஆட்சி நடத்துகிறார். அவர் ஜனநாயகத்தை கொன்றுவிட்டார். அவர் எப்போது எந்த குண்டு வீசுவார் என்று மக்கள் பயத்துடனேயே இருக்கின்றனர். மக்களை விரும்புவதற்கு பதிலாக அவர்களை பயமுறுத்தும் பயங்கரவாதியாக அவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று பேசினார்.
ஒரு நாட்டின் பிரதமரை பயங்கரவாதி என விஜயசாந்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com