நள்ளிரவு 2 மணிக்கு எடுத்த முடிவுக்கு கிடைத்த மரியாதை.. சரத்குமார் கையை பிடித்து வணக்கம் சொன்ன மோடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் தனது கட்சியை இணைக்க முடிவு செய்தார் என்றும் நள்ளிரவு 2 மணிக்கு இந்த முடிவை அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரிக்கு வருகை தந்திருந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் மேடையில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது.
மேடைக்கு வந்த பிரதமர் மோடி வரிசையாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தபோது சரத்குமார், ராதிகாவுக்கும் வழக்கம் போல் வணக்கம் செலுத்தினார்.
ஆனால் அருகில் இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சரத்குமார் மற்றும் ராதிகாவை பிரதமர் மோடியிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்த நிலையில் சரத்குமாரின் கையை பிடித்து பிரதமர் மோடி தனது வணக்கத்தை தெரிவித்தார். ராதிகாவுக்கும் கையெடுத்து கும்பிட்டு தனது மரியாதையை செலுத்தினார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு சரத்குமார் எடுத்த முடிவு காரணமாக அவருக்கு பிரதமரிடம் இருந்து முதல் மரியாதை கிடைத்துள்ளதாக கமெண்ட் பதிவாகி வருகிறாது.
#WATCH | சரத்குமாரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற பிரதமர் மோடி.. அழைத்து அறிமுகம் செய்து வைத்த பாஜக மாநில தலைவர்#SunNews | #PMModi | #Sarathkumar | #Kanyakumari pic.twitter.com/xja1YNLSEr
— Sun News (@sunnewstamil) March 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments