அரசியல் வரலாற்றில் பிரதமர் மோடியின் புதிய மைல்கல்… குவிந்து வரும் பாராட்டுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜனநாயக முறையிலான தேர்தலைக் கொண்டிருக்கும் இந்தியாவில் பிரதமர் மோடி தொடர்ந்து 20 ஆண்டுகளாக எவ்வித இடைவெளியும் இன்றி தலைவர் பதவி வகித்து வருகிறார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்படி ஆரம்பித்த அவருடைய ஏற்றம் தற்போது இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார். இன்றோடு அவர் தலைவர் பதவியில் 19 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார்.
கடந்த 2011 இல் குஜராத் முதல்வர், அடுத்து 2002, 2007, 2012 எனத் தொடர்ந்து மோடி குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்பு 2013 இல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு அறுதிப் பெரும்பான்மையோடு இந்தியாவின் பிரதமர் ஆனார். பின்னர் 2019 இல் நடைபெற்ற தேர்தலிலும் அவரே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இதுகுறித்து தொடர்ந்து 20 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து புதிய மைல்கல்லைப் படைத்த மோடிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடியின் இணையத்தளத்தில் சில தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. அதில் “130 கோடி மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே பிரதமர் மோடி தனது கவனத்தைச் செலுத்தினார். இந்திய வரலாற்றில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த 370-வது பிரிவு நீக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவது நனவாகி பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
விவசாயிகள் மீது செயற்கையாக கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் அறுக்கப்பட்டு சுதந்திரமாக்கப் பட்டுள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தங்கள், நிலக்கரிச் சீர்திருத்தங்கள், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தல், அந்நிய முதலீட்டில் சீர்திருத்தம், வரி சீர்திருத்தம் போன்றவை மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவியேற்ற அந்த ஆண்டே குஜராத்தின் பூஜ்நகரில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதன்பின் மோடி செய்த நலத்திட்டப் பணிகள் நிவாரணப் பணிகள், மக்கள் சார்ந்த கொள்கை முடிவுகள் எடுத்தல் மூலம் மக்களின் மிகப்பெரிய ஆதரவை மோடி பெற்றார்.
பிரதமராக மோடி பதவி ஏற்றப் பின்பும் மக்கள் சார்ந்த அவரின் திட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஜன்தன் திட்டம், முத்ரா திட்டம், ஜன் சுரஷா திட்டம், உஜ்வாலா திட்டம், சவுபாக்யா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பிரதமர் கிசான் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகம் செய்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் மக்கள் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்தன. குறிப்பாக இலவச உணவு தானியங்கள் வழங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கு நிதியுதவி போன்றவை பிரதமர் மோடியின் அரசால் வழங்கப்பட்டன.
பொதுச்சேவையில் தொடர்ந்து 20 ஆவது ஆண்டிற்குள் நுழையும் பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி எனும் மந்திரத்தின் மூலம் தேசத்தை தற்சார்பு இந்தியாவை எனும் இலக்கை நோக்கி நகர்த்தி வருகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments