பொங்கல் ரிலீஸ் படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. நன்றி தெரிவித்த நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் படத்தின் ஹீரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறிய நிலையில் அவருடைய வாழ்த்த்க்கு தனது நன்றியை அந்த நடிகர் தெரிவித்துள்ளார்.
அஜீத் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு தமிழ் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ என்ற தெலுங்கு படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 53 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில், ‘சிரஞ்சீவி அவர்கள் குறிப்பிடப்பட வேண்டிய நடிகர் என்றும் அவரது செழுமையான பணி மற்றும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த்தால் அவரை தலைமுறை தலைமுறையாக திரைப்பட ஆர்வலர்களுக்கு அவரை பிடிக்க வைத்துள்ளது என்றும் சாதனையாளர் விருது பெறும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிரஞ்சீவி, ‘உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி என்று ம் மிகுந்த தாழ்மையுடன் மரியாதையுடன் நான் இதை உணர்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக வெற்றி நடிகராக விளங்கி வரும் சிரஞ்சீவி தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் அதன் பின்னர் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் அரசியலை விட்டு முழுவதுமாக விலகி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Feel Immensely Honoured and Humbled, Hon’ble Prime Minister Sri @narendramodi ji. Very grateful for your kind words! ???? https://t.co/RImjGfgWIM
— Chiranjeevi Konidela (@KChiruTweets) November 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments