இளையராஜாவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்கரையும் ஒப்பிட்டு சமீபத்தில் இளையராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி குறித்து வெளியான புத்தகம் ஒன்றுக்கு இசைஞானி இளையராஜா அணிந்துரை எழுதி இருந்தார். அதில் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்றும் விளிம்பு நிலை பெண்கள் மற்றும் மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது என்றும் இந்த சமூக மாற்றங்களை தற்போது அம்பேத்கார் இருந்து பார்த்திருந்தால் பெருமைப்பட்டு இருப்பார் என்றும் எழுதியிருந்தார்.
சட்டமேதை அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் இளையராஜா ஒப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும், அதேபோல் பலர் ஆதரவு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடப்பட்டது .
இந்த நிலையில் தான் மோடி குறித்து கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான் என்றும் அதனை வாபஸ் வரமுடியாது என்றும் இளையராஜா கூறியிருந்தார். இந்த நிலையில் இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து பேசிய பிரதமர் மோடி, ’தன்னைப்பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments