சுர்ஜித் மீட்பு விவகாரம்; முதல்வர், துணை முதல்வருக்கு போன் செய்த பிரதமர், லதா ரஜினி

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ள நிலையில் அந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுர்ஜித் நிலை என்ன? என்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குழந்தை சுர்ஜித் மீட்பு குறித்து முதலமைச்சரிடம் அவர் விவரங்களை கேட்டறிந்து அந்த சிறுவனை நலமுடன் மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை உறுதி செய்ய பிரதமர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள், குழந்தை மீட்பு பணி எப்படி நடைபெறுகிறது? குழந்தை எப்பொழுது மீட்கப்படுவான்? போன்ற விவரங்களை கேட்டு அறிந்தததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்திற்கு கனமழையா?

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது 

ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க

நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர்!

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் தாமு செய்த பிரார்த்தனை செய்து வருகிறார்.

அனைத்து சுர்ஜித்தையும் காப்பாற்றுங்கள்: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்

கடந்த வெள்ளி அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணறு ஒன்றில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன்

குழந்தை சுர்ஜித்: 66 மணி நேரமாக தொடரும் போராட்டம்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துழை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 64 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.