பிளஸ் 2வில் முதல் மார்க் எடுத்த மாணவர் தற்கொலை: வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயரமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் வேலூர் அருகே பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகுஎன்ற பகுதியில் பாலாஜி-சுமதி என்ற தம்பதியின் மகன் அசோக்குமார் பிளஸ் டூ படித்து வந்த நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானதும் மிகவும் ஆவலுடன் ரிசல்ட்டை பார்த்தார். தான் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மதிப்பெண் பட்டியல் வந்த பின்னர் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று கவலையுடன் இருந்ததாக தெரிகிறது.

ஒரு பக்கம் அசோக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் மகன் பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்ததை மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கம் தான் எதிர்பார்த்த மார்க் வரவில்லை என்ற சோகத்தில் அசோக்குமார் அருகிலிருந்த மாந்தோப்புக்கு சென்று தாயின் சேலையை வைத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

இந்த தகவல் பெற்றோர்கள் மற்றும் சக மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அசோக்க்குமாரின் பெற்றோர்கள் அவருடைய பிணத்தின் மீது கதறி அழுதது பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது

தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமின்றி எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லை என தேர்ச்சியடைந்த மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதுகுறித்து கவுன்சிலிங் செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது

More News

கொரோனா ஊரடங்கு எதிரொலி: சினிமா ரசிகர்களுக்கு புதிய வகை தியேட்டர் ஏற்பாடு!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட

கொரோனாவால் வேலையிழப்பு: முறுக்கு வியாபாரம் செய்யும் பேராசிரியர்

கொரானா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலையை இழந்து வருமானத்தை இழந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது

கொரோனா நேரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கு இப்படியொரு சோதனையா??? பரபரப்பு தகவல்!!!

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவு பப்புவா நியூ கினியா. அத்தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுத்துடுறேன்… விஜய் மல்லையாவின் புது டெக்னிக்!!!

இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா

திரையரங்குகளுக்கு தளர்வுகள் எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு தொழில் முடங்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது