பிளஸ் 2வில் முதல் மார்க் எடுத்த மாணவர் தற்கொலை: வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயரமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் வேலூர் அருகே பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகுஎன்ற பகுதியில் பாலாஜி-சுமதி என்ற தம்பதியின் மகன் அசோக்குமார் பிளஸ் டூ படித்து வந்த நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானதும் மிகவும் ஆவலுடன் ரிசல்ட்டை பார்த்தார். தான் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மதிப்பெண் பட்டியல் வந்த பின்னர் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று கவலையுடன் இருந்ததாக தெரிகிறது.
ஒரு பக்கம் அசோக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் மகன் பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்ததை மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கம் தான் எதிர்பார்த்த மார்க் வரவில்லை என்ற சோகத்தில் அசோக்குமார் அருகிலிருந்த மாந்தோப்புக்கு சென்று தாயின் சேலையை வைத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
இந்த தகவல் பெற்றோர்கள் மற்றும் சக மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அசோக்க்குமாரின் பெற்றோர்கள் அவருடைய பிணத்தின் மீது கதறி அழுதது பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது
தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமின்றி எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லை என தேர்ச்சியடைந்த மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதுகுறித்து கவுன்சிலிங் செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout