கடைசி பொண்ணு நானாக இருக்கணும்: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தின் பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், ‘பாலியல் தொல்லையால் சாகற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்க வேண்டும். இனி எந்த ஒரு பெண்ணும் என்னை மாதிரி சாகக்கூடாது. இந்த பூமியில் நிறைய வாழ ஆசைப்பட்டேன், ஆனால் இப்போது பாதியிலேயே போகிறேன். இன்னொரு தடவை இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். பெருசாகி நிறைய பேர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை ஆசையாய் இருக்கிறது’ என்று அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து வரும் சம்பவங்களால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.