3 முக்கிய கடமை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் எடுத்து கொண்ட உறுதிமொழி..!

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதை ஆகிய மூன்று முக்கிய கடமையை பின்பற்றி, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

தளபதி விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இன்று இந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உறுதிமொழி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ்மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்.

More News

ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வரும் மீரா ஜாஸ்மின் நடித்த 'குயின் எலிசபெத்'

மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

தேர்வுக்கு படிக்காமல் முத்தம் கொடுத்த மாணவி.. விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி..!

மாணவி ஒருவர் தனது சக தோழிக்கு முத்தம் கொடுத்த வீடியோவை பதிவு செய்து, 'விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால் தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று பதிவு செய்ததை

முதல்முறையாக த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப பாடினேன்.. சின்மயி கூறிய ஆச்சரிய தகவல்..!

பொதுவாக பின்னணி பாடகிகள் பாடும் பாடலுக்கு ஏற்றவாறு தான் நடிகைகள் உதட்டசைவு செய்து நடிப்பார்கள் என்பது தெரிந்தது. ஆனால் பாடகி சின்மயி, த்ரிஷா பாடுவது போல் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட

தளபதி விஜய்யின் 'கோட்' படத்தில் இணைந்த பிரபலத்தின் 16 வயது மகள்.. என்ன கேரக்டர்?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் பிரபலத்தின் 16 வயது மகள் இணைந்து உள்ளதாகவும் அவர் விஜய்யின் மகளாக நடித்து வருவதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை

இந்த உலகத்தில் எனக்கு பிடித்த இருவர் இவர்கள் தான்.. அதிதி ஷங்கரின் எமோஷனல் பதிவு..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்த இருவர் இவர்கள்தான் என புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில்