வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றுங்கள்: பிரபல நடிகை வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் நேற்று நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பல பேர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை தனியே விட்டு ஊருக்குப் போய்விட்டார்கள். செல்லப்பிராணிகளை தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம். செல்லப் பிராணிகளும் ஒரு உயிரினம் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
மேலும் கொரோனா வைரஸ் பற்றி அந்த விலங்குகளுக்கு எதுவும் தெரியாது. அது மட்டுமன்றி தெரு நாய்களுக்கும் தெருவில் உள்ள விலங்குகளுக்கும் முடிந்தால் சாப்பாடு போடுங்கள். உடனே ஒரு குரூப் ஓடி வந்து ’எங்களுக்கே சாப்பாடு இல்லை, நாங்கள் எப்படி நாய்க்கு சாப்பாடு போட முடியும்’ என்று கேட்பார்கள். நான் எல்லோரையும் சாப்பாடு போடச் சொல்லவில்லை. முடிந்தவர்கள் மட்டும் தயவு செய்து நாய்களுக்கு மற்ற விலங்குகளுக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொடுங்கள் என்று நடிகை வரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Please don't abandon your pets..!!! Please feed the street animals..if you can..!! pic.twitter.com/2CPQMP7Tf8
— ?????????????????? ?????????????????????? (@varusarath) March 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com