வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றுங்கள்: பிரபல நடிகை வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் நேற்று நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பல பேர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை தனியே விட்டு ஊருக்குப் போய்விட்டார்கள். செல்லப்பிராணிகளை தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம். செல்லப் பிராணிகளும் ஒரு உயிரினம் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

மேலும் கொரோனா வைரஸ் பற்றி அந்த விலங்குகளுக்கு எதுவும் தெரியாது. அது மட்டுமன்றி தெரு நாய்களுக்கும் தெருவில் உள்ள விலங்குகளுக்கும் முடிந்தால் சாப்பாடு போடுங்கள். உடனே ஒரு குரூப் ஓடி வந்து ’எங்களுக்கே சாப்பாடு இல்லை, நாங்கள் எப்படி நாய்க்கு சாப்பாடு போட முடியும்’ என்று கேட்பார்கள். நான் எல்லோரையும் சாப்பாடு போடச் சொல்லவில்லை. முடிந்தவர்கள் மட்டும் தயவு செய்து நாய்களுக்கு மற்ற விலங்குகளுக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொடுங்கள் என்று நடிகை வரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

கொரோனாவில் இருந்து தப்பிக்க எஸ்வி சேகர் கூறிய ஐடியா

கொரோனா வைரஸ் உலகில் உள்ள மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் உலக நாடுகளின் அரசுகள் திணறி வருகின்றன

போலீசாருக்கே வாளை காட்டி எச்சரித்த பெண் சாமியார்: போலீஸ் எடுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைப்பது ஒன்றுதான்.

கொரோனா; தேசியம், இனம் என்றெல்லாம் பார்க்காது!!! மோதல்களைக் கைவிடுங்கள்!!! ஐ.நா. வலியுறுத்தல்!!!

“நம் உலகம் கொரோனா என்ற பொது எதிரியை எதிர்க்கொண்டு வருகிறது. அது தேசியம், இனம், நிறம் போன்ற வேறுபாடுகளையெல்லாம் பார்க்காது.

தமிழ்நாடு முழுவதிலும் டீக்கடைகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்க மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகின்றனர்.