அஜித்தை விரைவில் சம்மதிக்க வையுங்கள்: பிரபல நடிகை கோரிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் அஜித், போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் அஜித்தை விரைவில் பாலிவுட்டுக்கு அழைத்து வருவேன் என்றும், அவருக்காக மூன்று கதைகள் வைத்திருப்பதாகவும் போனிகபூர் டுவிட் ஒன்றை சமீபத்தில் பதிவு செய்திருந்தார்
இந்த நிலையில் 'தீராத விளையாட்டு பிள்ளை', ''ஆதி பகவன், 'யுத்தம் செய்', 'சேட்டை', உள்பட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை நீதுசந்திரா, போனிகபூரின் இந்த டுவீட் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'அஜித்தின் ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். பாலிவுட் படங்களில் நடிக்க, அவரை விரைவில் சம்மதிக்க வையுங்கள். அது இந்தி சினிமாவுக்கே பெருமை. போனிகபூருக்கு வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார்.
நடிகை நீதுசந்திராவின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்களும், ரீடுவிட்டுக்களும் குவிந்து வருகிறது. அஜித்துடன் நடிக்கும் நீதுசந்திராவின் ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
I would love to be a part of Actor Superstar #Ajith s action movie. He has always been my favourite action actor. Please convince him soon! That's will be a blessing to Hindi cinema. Great Luck @BoneyKapoor ji ?????? https://t.co/jEfjVvHxih
— Neetu N Chandra (@Neetu_Chandra) April 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments