91 வயதில் காலமானார் பிளேபாய் நிறுவனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'பிளேபாய்' இதழ் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 91. வயோதிகம் காரணமாகவே அவர் மரணம் அடைந்ததாக அவரது மகன் அறிவித்துள்ளார்.
பிளேபாய் அட்டைப்படத்தில் இடம்பெறுவதை உலகில் உள்ள அனைத்து நடிகைகளும் பெருமையாக கருதுவர். இந்த இதழின் முதல் அட்டைப்படத்தில் தோன்றியவர் மர்லின் மன்றோ. அன்று முதல் இன்று வரை உலகின் முன்னணி நடிகைகள் பலருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இந்த இதழில் வெளிவந்துள்ளது. மேலும் உலகில் அதிகமாக ஆண்களால் வாங்கப்படும் இதழ் இதுதான் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
ஆனால் அதே நேரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடி பிரதிநிதிகள் வரை விற்பனையாகி வந்த இந்த இதழ் தற்போது 10 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. பெருகிவரும் ஆன்லைன் உபயோகமே இந்த இதழின் விற்பனை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments