பாடகி ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

  • IndiaGlitz, [Tuesday,June 26 2018]

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமாகிவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தனது தாயாரின் இந்த வதந்தி குறித்து அவரது மகன் முரளி விளக்கமளித்துள்ளார். தனது தாயார் மறைவு குறித்து பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், தனது தாயார் அவரது சொந்த ஊரான ஸ்ரீசைலத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் இருப்பதாகவும் விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எஸ்.ஜானகி குறித்த வதந்தியால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது அவரது மகன் கொடுத்த விளக்கத்தில் நிம்மதி அடைந்துள்ளனர்.

Listen to S. Janaki songs