இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்: எஸ்பிபி முதலாம் ஆண்டு நினைவு தினம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணி அவர்கள் கடந்த ஆண்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி வந்தாலும் இணை நோய்கள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி காலமானார்.
எஸ்பிபி அவர்கள் காலமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன. ’இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என அவர் பாடிய பாடல் அவருக்கு மிகச் சரியாக பொருந்தும் என்று சமூக வலைதள பயனாளர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.
இந்த உலகில் இசை உள்ள வரை எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவுகள் அனைவரது மனதில் இருக்கும் என்றும் அவரது பாடல்களை யாராலும் மறக்க முடியாது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்த ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் எஸ்பிபி உடன் தங்களுக்கு நிகழ்ந்த மலரும் நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடலான ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற பாடல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout