பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு எலும்பு முறிவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய குரலால் பல இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர், பிரபல பாடகி எஸ்.ஜானகி. அவருக்கு திடீர் என எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி, லட்ச கணக்கான ரசிகர்களை தன்னுடைய இனிமையான குரலால் கவர்ந்தவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி.
கடைசியாக இவர், 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரிக்கு குரல் கொடுத்திருந்தார். சமீப காலமாக பாட வாய்ப்புகள் வந்தாலும், அதனை தவிர்த்து விட்டு குடும்பத்தினரோடு இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் மைசூரில், உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது, கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் எஸ்.ஜானகி அம்மாவிற்கு, உடலில் சிறு சிறு காயங்களும் இடுப்பில், எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து உறவினர்கள் உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எடுப்பு எலும்பு முறிவிற்கு , அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் தற்போது அவருக்கு முழுமையான ஓய்வு வேண்டும் என்றும், விரைவில் குணமடைவார் என்றும் கூறியுள்ளனர். இது இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com