பின்னணி பாடகிகளும் இப்படி ஆரம்பிச்சிட்டாங்களே? இளம் பாடகி நடத்திய அட்டகாசமான போட்டோஷுட்!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

தமிழ், இந்தி என பல மொழிகளில் பாடி அசத்திவரும் இளம் பின்னணி பாடகி ஒருவர், ஏற்கனவே தன்னுடைய அழகால் ரசிகர்களை ஈர்த்துவரும் நிலையில் தற்போது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பின்னணி பாடகிகளெல்லாம் இப்படி இறங்கிவிட்டால் என்ன ஆவது? என்று உற்சாகத்தோடு பிரமிப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பாடலைப் பாடி இந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஜோனிடா காந்தி. இதையடுத்து ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தி சினிமாக்களில் பல ஹிட் பாடல்களை பாடிவந்தார். அதைப் போலவே தமிழிலும் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஓகே கண்மணி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடலையும் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓஎம்ஜி’ பாடலையும் பாடி பிரபலமானார்.

அதையடுத்து அனிருத் இசையமைத்த ‘கோலமாவு கோகிலா‘ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கண்ணே’ பாடலையும், ‘டாக்டர்’ திரைப்படத்திற்காக ‘செல்லம்மா செல்லம்மா’ பாடலையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ என்று பல ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டுள்ளார்.

இந்தி, தமிழைத் தவிர தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளிலும் பின்னணி பாடலை பாடிவரும் இவர் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பு நடைபெற்ற நிறைவு விழாவில் பங்குபெற்று அசத்தலாக பாடியிருந்தார். இப்படி இந்திய சினிமாவில் துள்ளலான குரலால் இளம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து வரும் ஜோனிடா காந்தி அவ்வபோது பேஷன், போட்டோஷுட் விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜோனிடா காந்தி எடுத்துக் கொண்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.