ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் சுற்றுச்சுழல் மாசு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரித்து வரும் நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவ்ரி மாதம் 1ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன்கீழ் இன்று பேசிய முதல்வர், '2019ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பாக்கு மட்டை, துணி பைகள் உபயோக ஊக்குவிக்கப்படும் என்றும் முதல்வர் மேலும் கூறியுள்ளார்,.

மக்காத பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர் குவளைகள், தண்ணீர் குவளைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல், கைப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிக்க, விற்பனை செய்ய, சேமிக்க, பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.