இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடப் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களின் இரத்ததில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து எடுத்து அதை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புதிய நோயாளிகளுக்குச் செலுத்துவதன் மூலம் நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகளை இயல்பாக பெறமுடியும். இந்தச் சிகிச்சை முறை பிளாஸ்மா சிகிச்சை என அழைக்கப்பட்டு வந்தது. கொரோனாவின் ஆரம்பத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சிகிச்சை முறை பெரிய பலனைத் தரவில்லை என ஐசிஎம்ஆர் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டு உள்ளது.
பிளாஸ்மா சிகிச்சையானது கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகளை போதிய அளவிற்கு உருவாக்க வில்லை என்றும் கொரோனாவில் ஏற்படும் இறப்புகளை இந்த பிளாஸ்மா சிகிச்சை கட்டுப்படுத்தவில்லை என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டு உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா முறை எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்விலும் பெரிய வித்தியாசம் இல்லாததால் தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கைவிடப்போவதாக ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் உருமாறிய விஷயங்களாலும் பிளாஸ்மா சிகிச்சை முறை பயனற்று போனதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments