இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,May 18 2021]

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடப் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களின் இரத்ததில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து எடுத்து அதை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புதிய நோயாளிகளுக்குச் செலுத்துவதன் மூலம் நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகளை இயல்பாக பெறமுடியும். இந்தச் சிகிச்சை முறை பிளாஸ்மா சிகிச்சை என அழைக்கப்பட்டு வந்தது. கொரோனாவின் ஆரம்பத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சிகிச்சை முறை பெரிய பலனைத் தரவில்லை என ஐசிஎம்ஆர் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டு உள்ளது.

பிளாஸ்மா சிகிச்சையானது கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகளை போதிய அளவிற்கு உருவாக்க வில்லை என்றும் கொரோனாவில் ஏற்படும் இறப்புகளை இந்த பிளாஸ்மா சிகிச்சை கட்டுப்படுத்தவில்லை என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டு உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா முறை எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்விலும் பெரிய வித்தியாசம் இல்லாததால் தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கைவிடப்போவதாக ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் உருமாறிய விஷயங்களாலும் பிளாஸ்மா சிகிச்சை முறை பயனற்று போனதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஏன் இப்படி செய்தீர்கள்? முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரிந்ததே.

உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டுமின்றி

அடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டம்!

ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்தது.

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை!

சென்னையில் இன்றுமுதல் இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதை விமர்சனம் செய்து தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்