இமயமலை பகுதிகளில் தாவரங்களின் உயரம் அதிகரித்து வருகிறது

இமயமலை பகுதிகளில் மலை அமைப்பு (HKH) தட்ப வெட்பச் சூழல் காரணமாகப் பெருமளவு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.  மேற்கில் ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கில் மியான்மர் வரை எட்டு நாடுகளில் இமயமலையில் மலைகள் படர்ந்துள்ளன.  இந்த மலைப் பிரதேசகள் அதனை ஒட்டிக் காணப்படுகின்ற 10 நதிகளுக்கான நீரை வழங்கி வருகிறது.  

இந்த மலைகளில் பனி மற்றும் பனிப்பாறைகளில் இருந்துதான் கணிசமான அளவு நீர் சேமிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பனிப்பாறைகளில் காணப்படுகின்ற பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) மற்றும் கிரையோஸ்பியர் (Cryosphere components) கூறுகள்தான் இங்குள்ள உயிர் சூழலைக் காத்து வருகிறது. இந்த மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களின் சொந்தப் பாரம்பரியமான முறைப்படி வேளாண் பயிரினங்களை வளர்த்து வருகின்றனர்.இந்தியாவில் அசாம், உத்ரகாண்ட், ஹிமாச்சல், மணிப்பூர், ஜம்மு & காஷ்மீர், மேகலாயா, மிசோரம், நாக்லாந்த், சிக்கிம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், டார்ஜிலிங், மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இமயமைலையின் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.  

தட்ப வெட்ப மாற்றம்

இமயமலைப் பகுதிகளில் தற்போது தட்ப வெட்ப நிலைமைகளில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  Global Change Biology யினர் நடத்திய ஆய்வின் மூலம் இமயமலையின் உயரமான மலைப் பகுதிகளில் வளர்கின்ற தாவரங்களின் வளர்ச்சி அதிகமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இக்குழுவில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை உறுதிசெய்துள்ளர். வழக்கத்தை விட அதிகளவு பனிபொழிவு தான் தாவரங்களின் அதிக வளர்ச்சிக்குக் காரணம் என பேராசிரியர் வால்டர் இம்மர்ஜீல் குறிப்பிடுகிறார். எனினும் மரங்களின் வளர்ச்சி குறித்து இறுதியான காரணங்கள் இதுவரை தெளிவாகக் கண்டுபிடிக்கப் படவில்லை.

சில நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்போது சீனா பகுதியிலுள்ள மலைகளில் மரக்கிளைகள் கூட விரிவடைவதாக மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. விஞ்ஞானிகள் சிலரும் இமயமலையில் வளர்ந்துள்ள மரங்களின் படங்களை வைத்து இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.  

இதுவரை இமயமலை பகுதிகளில் பனிப்பாறைகளைக் குறித்தும் அங்குள்ள ஏரிகளைக் குறித்தும் தான் ஆய்வுகள் செய்யப்பட்டன. தற்போது இமயமலை பகுதிகளில் மண் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி நிலை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வழக்கமான உயரத்தை விட அதிக உயரங்களில் மரங்கள், செடிகள் வளர்வது குறித்து ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் இது மேலும் தட்ப வெட்பச் சூழலில் பாதிப்பினை உருவாக்கும். திடீரென்று அதிகமாகின்ற மரங்களின் வளர்ச்சி நிலை, அதன் தொடர்ச்சியாகத்  தாவரங்களின் எண்ணிக்கை பெருக்கம் மூடிய பனி பகுதிகளில்  வெப்ப நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனியாக இருக்கும் இமயமலை பிளவுகளில் மரங்களின் பெருக்கம் அதிகமாகும் போது அதன் உயிர்ச்சூழலிலும் மாற்றம் ஏற்படும். குறைவான உயரமுள்ள தாவரங்கள் (Subnival plants) , மற்றும் புதர்கள் அதிகமாகியுள்ளதை அடுத்து பனிப்பாறைகளின் நீர் மட்டம் குறையத் தொடங்கும். தாவரப் பெருக்கம்  - பனிப்பாறை உருக்கத்திற்குக் காரணமாகிறது. பனிப்பாறை உருகும்போது நீர் சேமிப்புக் குறையவும் தொடங்கும். இமயமலை வளமான நீர் தேக்கப் பகுதி என்பதால் தற்போது தாவரங்களின் உயர வளர்ச்சி மற்றும் பெருக்கம் நீர் வரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதைக் குறித்த மேலும் விரிவான ஆய்விற்கு விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா-வெற்றிமாறன் படத்தின் புரட்சியான டைட்டில் அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த 'அசுரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும்

அஜித் பட வெற்றிக்கு வாழ்த்து கூறிய விஜய்! 

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்த படத்தின் ஒரு ஆண்டு விழாவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில்

5 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஷேர்ன்வார்னின் தொப்பி..!

ஷேன் வார்ன் பயன்படுத்திய தொப்பியை சுமார் ரூ.4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்துள்ளது.

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு 'ராட்சசன்' மற்றும்' சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள்

கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த 52 வயது நபர்!

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற 52 வயது பெயிண்டர் ஒருவர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கேயே அவர் தங்கி வேலை செய்து வந்த போது ஸ்வேதா