தீவிரவாதிகளால் பயணிகள் விமானம் கடத்தல். 118 பயணிகள் கதி என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
லிபியா நாட்டை சேர்ந்த அப்ரிகியாஸ் ஏர்பஸ் A320 விமானம் இன்று லிபியாவின் சபா நகரில் இருந்து திரிபோலி நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் திடீரென விமானத்தை குண்டு வெடிக்க செய்து தகர்த்துவிடுவோம் என மிரட்டி, விமானத்தை மால்டாவில் தரையிறக்க சொல்லியுள்ளனர்.
இதன்காரணமாக அந்த விமானம் மால்டாவில் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தனது டுவிட்டரில், "லிபியாவை சேர்ந்த சர்வதேச விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.. விமானத்தை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அசாதாரண சூழலால் மீட்பு படையினர், அங்கு அவசர நடவடிக்கைகளுக்கு பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments