தமிழ் திரையுலகில் ஒரு 4ஆம் பாக திரைப்படம்.. பிரபல நடிகரின் மகன் தான் ஹீரோ..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

தமிழ் திரை உலகில் இரண்டாம் பாக திரைப்படம் என்பது அதிகமாக தயாராகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ‘சிங்கம்’ உள்பட ஒரு சில படங்கள் மூன்றாம் பாகமாகவும் வந்துள்ளது. ஆனால் தமிழ் திரை உலகில் நான்காம் பாகமாக ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் பிரபல நடிகரின் மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பீட்சா’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. இதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு ’பீட்சா’ இரண்டாம் பாகமும் ’பீட்சா’ 3ஆம் பாகம் 2023ஆம் ஆண்டில் வெளியானது.

இந்த நிலையில் ’பீட்சா’ படத்தின் நான்காம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இவர் ‘கடாரம் கொண்டான்’ ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய எஸ்.ஜே அர்ஜுன் தான் ’பீட்சா’ படத்தின் 4ஆம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

கோபம் வரும்போது என்ன செய்ய வேண்டும்? புத்தாண்டு ரெசல்யூஷன் சொல்லும் போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை தாண்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளை புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களுக்கு

சின்ன பட்ஜெட் படங்களுக்கு பொற்காலம்.. 2023ல் வெற்றி பெற்ற அறிமுக இயக்குனர்கள்..!

கடந்த பல ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன என்றும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

எந்த அரசியல் கட்சியும் செய்யாத உதவி.. நெல்லையில் விஜய் செய்த செயல்..!

தளபதி விஜய் நேற்று நெல்லை சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில், எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு செயலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் எவிக்சன் ஆகும் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்ஸன் மற்றும் ரவீனா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இருவருக்குமே லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக

இந்த வாரம் ஒன்றல்ல.. இரண்டு எலிமினேஷன்.. யார் யார் வெளியேறினார்கள்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது ரவீனா என்ற தகவல் வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.