பிட்சா 3 இல் ஒலியின் திகில் வடிவம்.. இசை வித்தை செய்துள்ள இசையமைப்பாளர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

சினிமா இசை சாம்ராஜ்யத்தில் மரபு இசைகளுக்கு சவால் விடும் அளவுக்கு புதிய கண்ணோட்டம் கொண்டவராக அருண் ராஜ் ஒளிர்கிறார். அவரது சமீபத்திய படைப்பான, அஸ்வின் காக்கமானு மற்றும் காளி வெங்கட் நடித்த “பிட்சா 3” இல் ஒலியை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் வித்தை செய்துள்ளார்.

200 வருடம் பழமையான உடைந்த பியானோவில் இருந்து பெருகும் இசைப் பிரவாகம் அருண் ராஜ் “பிட்சா 3” க்காக ஒரு விசித்திர இசைப்பயணத்தில், முற்றிலும் புதிய ஒலியின் தேடலைத் தொடங்கியுள்ளார். இந்தத் தேடல் அவரை நாட்டின் மிகப் பழமையான ‘மியூசி மியூசிகல்ஸ்’ என்ற கடைக்கு இட்டுச் சென்றுள்ளது. இங்குதான் அவர் அந்த 200 வருடம் பழமையான உடைந்த பியானோவைக் கண்டடைந்தார். மறக்கப்பட்ட அந்த அற்புத கருவிக்கு புத்துயிர் அளிக்க முடிவெடுத்தார். ஆனால் அந்தக் கருவி ஒலிப்பதிவு கூடத்துக்குள் நுழையாத அளவு பெரிதாக இருந்தது. அருண் ராஜும் அவரது குழுவும் அந்த பழமை வாய்ந்த பியானோவை பெரு முயற்சிக்குப் பிறகு ஒரு பெரிய வளாகத்திற்கு கொண்டு வந்து, பல புதிய உத்திகளை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தனர். அதன் பலனாக ஒலிகள் தனித்துவம் வாய்ந்த பல இசைக் கோர்வைகளாக வடிவெடுத்தன.

அருண்ராஜின் இசைத் தேடல் பழமை வாய்ந்த இசைக்கருவியை கண்டு பிடித்ததோடு நில்லாமல் பாடகர் குழுவரை நீள்கிறது. முன்பின் அறிமுகம் இல்லாத, அதிலும் பெரிதாய் பாடிய அனுபவம் இல்லாத வெளிநாட்டு பாடகர்களை பாட வைத்தது அருண்ராஜின் பெரும் சாமர்த்தியம். குழுப்பாடல் பதிவிற்கு வழக்கத்திற்கு மாறான இந்த புதிய பாடகர்களின் சேர்க்கை தனித்துவம் வாய்ந்த இசையைக் கொண்டு வந்தது. ஓர் அமைதியற்ற பரிமாணம் உடைய இந்த திகில் ஒலி படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஒலி அடங்கிய பிறகும் திகிலின் சாரம் காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் அருண் ஒரு பின்னணி இசைக்குழுவை வைத்து வித்தியாசமான பலவகை ஒலி தாக்கங்களையும் (sound effects) உருவாக்கியுள்ளார். அந்த ஒலி சுரங்களால் அறியப்பட்ட வழக்கமான மெல்லிசை குறிப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

ஒரு தலைசிறந்த ஒலி படைப்பு “பிட்சா 3” இல் அருண்ராஜின் பணி, இசையின் எல்லைகளை நகர்த்தி வைக்கிறது. வழக்கத்திற்கு மாறான கருவிகள், எதிர்பாராத அதிர்வுகள் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பின்னணி இசைக்குழு ஆகியவற்றின் மூலம், அவர் திகில் சினிமாவின் ஒலி நிலப்பரப்பை மறுவரையறை செய்கிறார்.

அருண் ராஜ் ஒரு முன்னணி படை இசையமைப்பாளராக தனது நற்பெயரை நிலைநாட்டுகிறார், தொடர்ந்து திரைப்பட இசையின் நிலப்பரப்பை மறுசீரமைப்பு செய்து கொண்டிருக்கிறார்.

More News

'நீங்க பேசுங்க, இல்ல.. நான் பேசுவேன்: சித்தார்த் நடித்த 'சித்தா' த்ரில்லிங் டிரைலர்..!

நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' என்ற திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அனுஷ்காவுக்காக பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சவால்..!

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜீ5 தளத்தில் வெளியாகும் 'ஹட்டி'.. அனுராக் காஷ்யப் நடித்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம்

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ்  டிராமா 'ஹட்டி' திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !!

நடிகை அபர்ணாவின் தற்கொலைக்கு ரகசிய உறவு தான் காரணமா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல மலையாள நடிகை அபர்ணா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

'ஜவான்' ரிலீசுக்கு பின் 3 மாதங்கள் முக்கியமானது.. அட்லி

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம்  நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் முழு