இதைவிட கீழ்த்தரமான அரசாங்கத்தை பார்க்கவே முடியாது: கொந்தளித்த பியூஷ் மனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

இன்று நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒட்டு மொத்த தமிழர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம தெரிவித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஆவேசமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

தூத்துகுடி மக்களும், தமிழக மக்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி ரத்தம் சிந்தி வருகின்றனர். ஆனால் ஸ்டெர்லைட் ஓனர் அனில் அகர்வால் லண்டனில் எந்தவித பிரச்சனையும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். ஆட்சியாளர்கள் சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். சுற்றுச்சூழல் பிரச்சனையால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை.

இத்தனை நாட்கள் மக்கள் அமைதியாக போராடி வருகின்றார்களே! உங்களுக்கு காது செவிடா? தயவு செய்து மக்களை தூண்டி விடாதீர்கள். ஒரு சதவீத தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டாம். இந்த நாட்டில் 70% விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள். முடியவில்லை என்றால் பதவி விலகிவிடுங்கள்

இதைவிட கீழ்த்தரமான ஒரு அரசாங்கத்தை இனிமேல் பார்க்கவே முடியாது. மக்களிடம் வரிப்பணம் வாங்கி போலீசுக்கு சம்பளம் கொடுத்து அந்த மக்களையே அடிக்க சொல்கிற அரசை எங்கேயாவது பார்த்ததுண்டா? போலீஸ் எல்லாம் நம் மக்கள் தான். சுற்றுச்சூழலுக்காக மக்கள் போராடத்தான் செய்வார்கள். திருந்தவேண்டியது ஆட்சியாளர்கள்தான் என்று ஆவேசமாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்று நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான அப்பாவி பொதுமக்கள் 9 பேர்களின் மரணத்திற்கு

அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள்: பிரதமருக்கு விஷால் கோரிக்கை

இன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் கருத்து

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்திற்குள் 144 தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை

துப்பாக்கி சூடு சரிதான்: எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது டுவிட்டரில் பதிவாகும் கருத்துக்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.

ஸ்டெர்லைட் வன்முறை: பற்றி எரிகிறது ஊழியர்களின் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் 

தூத்துகுடியில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து அதன் காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலி