விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்டுக்கள்

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காரில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடுவது வைரலாகி வருகிறது. இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் இந்த கிகி நடனத்தை ஆடி அதன் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கிகி நடனம் ஆடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் விமானி ஒருவர் விமானம் மெதுவாக ரன்வேயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கீழே இறங்கி கிகி நடனம் ஆடினார். இவருடன் உதவி விமானியும் நடனம் ஆடியுள்ள வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

அலிஜேந்திரா என்ற பெண் விமானியின் இந்த கிகி நடன வீடியோ சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது. இவர் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் விமானியாக பணிபுரிந்து வருபவர் என்பதும் சுமார் 40 நாடுகளுக்கு இவர் விமானத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.