பிரதமர் மோடியின் 2வது பிரஸ்மீட்: கலாய்த்த கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் இந்த பேட்டியிலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவே இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் அருகில் இருந்த அமித்ஷா தான் பதிலளித்தார். எனவே இந்த பிரஸ்மீட் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாறை ஒன்றின் அருகே கண்ணை மூடி சிறிது நேரம் தியானம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நடிகை கஸ்தூரி, 'பிரதமர் மோடி 2வது முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது எடுத்த புகைப்படம்' என்று கூறி கலாய்த்துள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
Exclusive !
— Kasturi Shankar (@KasthuriShankar) May 18, 2019
Picture taken at Modi ji's second press conference . #NarendraModi #Kedarnath #KATZ #PICK kas108 pic.twitter.com/CvcjJw0G96
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments