கடவுளாக மாறிவிட்ட US இராணுவ வீரர்கள்… ஆப்கனில் நெஞ்சை உலுக்கும் காட்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டம் தற்போது தாலிபான்களால் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த எச்சரிக்கையை மீறி காபூல் விமான நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மீது தாலிபான்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
மேலும் விமான நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் மீதும் ரப்பர் டயரை வைத்து தாலிபான்கள் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இத்தனை அச்சுறுத்தலுக்கு இடையிலும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் அதுவும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல் நாட்டைவிட்டு தப்பித்துவிட வேண்டும் என நினைத்து இரவு பகலாகக் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்காவை சேர்ந்த மீட்பு விமானப் பகுதி மட்டுமே தற்போது அமெரிக்க இராணுவ வீரர்களின் கைகளில் இருக்கிறது. மற்றபடி விமான நிலையித்தின் பிரதான வழி உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தற்போது அமெரிக்க இராணுவவீரர்கள் இருக்கும் பகுதியை நாடி எங்களையும் எப்படியாவது அழைத்துச் சென்றுவிடுங்கள் என்று கதறி வருகின்றனர்.
இதனால் மனம் இறங்கிய அமெரிக்க இராணுவம் குழந்தைகளை மட்டும் பெரிய கம்பிவேலிகளுக்கு மத்தியில் வாங்கிக்கொள்ளும் காட்சி தற்போது ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த அந்தச் சிறுவர்களுடன் இராணுவவீரர்கள் பலர் விளையாடிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் காட்சி இதுதான் மனிதநேயம் என்று பாராட்டும் அளவிற்கு மனதில் உயர்ந்து நிற்கிறது.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற சில நாடுகள் தங்களுடைய குடிமக்களை சொந்த நாட்டிற்கு மீட்டுச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆப்கன் பொதுமக்கள் சிலரையும் அமெரிக்க இராணுவம் தங்களுடன் அழைத்துக் கொள்வதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் இதுவரை 2 ஆயிரம் ஆப்கன் மக்கள் அமெரிக்க இராணுவப் படைகளால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வரும் 31 ஆம் தேதிக்குள் 6 ஆயிரம் பேரை மீட்கும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments