close
Choose your channels

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் நாயகி

Sunday, March 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டால் அடுத்தது அவர்களுடை கனவு விஜய் அல்லது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த ஆசை அனைத்து நடிகைகளுக்கும் எட்டிப்பார்ப்பதை யாராலும் தவிர்க்கவே முடியாது. லட்சுமிமேனன், கீர்த்தி சுரேஷ் ஆகிய ஒருசில நடிகைகளுக்கு இந்த வாய்ப்பு வெகு சிக்கிரமே கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'பிச்சைக்காரன்' பட நாயகி சாதனா டைட்டஸ் அவர்களுக்கும் இந்த ஆசை தற்போது எழுந்துள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் 'உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் அஜித்தின் தீவிர ரசிகை. அவர் நடித்துள்ள படங்களை ஒன்றுவிடாமல் தவறாமல் பார்த்து விடுவேன். தமிழில் நான் நடிக்க தொடங்கிய பிறகு எப்படியாவது அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் நாயகிக்கு எழுந்துள்ள ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment